கால்பந்து விளையாடும்போது காலில் காயம் ஏற்பட்டதால், நாதன் லயன் ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்டில் விளையாடுவாரா? எந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் அடுத்த மாதம் 4-ந்தேதி ஓல்டு டிராபோர்டில் நடக்கிறது. தற்போது ஆஸ்திரேலியா மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
இதற்கான பயிற்சியின்போது ஆஸ்திரேலியா வீரர்கள் கால்பந்து விளையாடினர். அப்போது நாதன் லயனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் 4-வது டெஸ்டில் நாதன் லயன் விளையாடவில்லை என்றால், அது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
இதுவரை முடிந்து மூன்று போட்டிகளில் நாதன் லயன் 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். பேட் கம்மின்ஸ் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளா்ர என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக..
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 2 ரன்கள் தேவை என்ற நிலையில் நேதன் லயன் அருமையான ஒரு ஓவரை வீசி பென் ஸ்டோக்சுக்கு நெருக்கடி அளித்தார். ஒரு கட்டத்தில் ஸ்டோக்ஸ் வாரிக்கொண்டு ஒரு ஸ்லாக் ஸ்வீப்பை ஆட முயல பந்து கால்காப்பைத் தாக்கியது, லயனும் ஆஸ்திரேலியர்களும் உயிர்போகுமாறு அப்பீல் செய்தனர், நடுவர் ஜோயெல் வில்சன் வாளாவிருந்தார்.
ஒருவேளை ரிவியூ இருந்து கேட்டிருந்தால் ஸ்டோக்ஸ் அவுட். ஆனால் உலகக்கோப்பையிலிருந்தே இங்கிலாந்தை தொடரும் அதிர்ஷ்டம், ஸ்டோக்ஸை தொடரும் அதிர்ஷ்டம் இங்கிலாந்துக்கு ஒரு வரலாற்று வெற்றியை தேடித்தந்துள்ளது.
வெற்றி பெற 5 ரன்கள் இருக்கும் போது கமின்ஸ் பந்து ஒன்றை ஜாக் லீச் கால்காப்பில் வாங்க அது முழுதும் லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து என்பது தெரிந்தும் ரிவ்யூ செய்து ஆஸி. அனாவசியமாக ரிவியூவை இழந்தது. மேலும் நேதன் லயன் ஒரு அருமையான ரன் அவுட் வாய்ப்பையும் தட்டுத்தடுமாறி கோட்டை விட்டார்.