ஆஷஸ் தொடரில் இருந்து விலகினார் ஆண்டர்சன்; அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

ஆஷஸ் தொடரில் இருந்து விலகினார் ஆண்டர்சன்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆஷஸ் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து காயம் காரணமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் கடந்த 1-ந்தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. ஏற்கனவே காயத்தால் (Half Injury) அவதிப்பட்டு வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியில் இடம்பிடித்தார்.

ஆனால் நான்கு ஓவர்கள் வீசிய நிலையில் அதே இடத்தில் காயம் ஏற்பட்டதால் அத்துடன் வெளியேறினார். 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை.

ஓல்டு டிராபோர்டில் அடுத்த மாதம் தொடங்கும் 4-வது டெஸ்டில் விளையாடுவதற்காக தயாராகி வந்தார். இந்நிலையில் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

LEEDS, ENGLAND – AUGUST 25: Nathan Lyon of Australia looks dejected ater fumbling the ball and missing a run out opportunity on Jack Leach of England during day four of the 3rd Specsavers Ashes Test match between England and Australia at Headingley on August 25, 2019 in Leeds, England. (Photo by Ryan Pierse/Getty Images)

இதனால் அவருக்குப் பதிலாக கிரேக் ஓவர்ட்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ஸ்விங் பந்தால் அச்சுறுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நான்கு ஓவரோடு ஆஷஸ் தொடர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு துரதிருஷ்டவசமாக முடிவுக்கு வந்துள்ளது.

 

Mohamed:

This website uses cookies.