ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தநிலையில், கிரிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த தினம் துவங்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் பாக்சிங் டே போட்டி நாளை (26ம் தேதி) துவங்க உள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், மூன்றாவது போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் ஸ்காட் பலாண்ட் என்னும் அறிமுக வீரருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் டேவிட் வார்னர், மார்கஸ் ஹரீஸ், லபுசேன், ஸ்டீவ் ஸ்மித், டர்வீஸ் ஹெ, கேமிரன் க்ரீன் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்;
டேவிட் வார்னர், மார்கஸ் ஹரீஸ், மார்னஸ் லபுசேன், ஸ்டீவ் ஸ்மித், டர்வீஸ் ஹெட், கேமிரான் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் மார்ஸ், நாதன் லயோன், ஸ்காட் ப்லாண்ட்.