வேற வழியே இல்ல… இதுக்கு மேல அசிங்கப்பட முடியாது; அதிரடி மாற்றங்களுடன் ஆஸ்திரேலியாவை சந்திக்கும் இங்கிலாந்து அணி !!

வரலாற்று சிறப்புமிக்க பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில், கிரிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த தினம் துவங்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் பாக்சிங் டே போட்டி நாளை (26ம் தேதி) துவங்க உள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு போட்டியிலும் படுதோல்வியை சந்தித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ஆடும் லெவனில் நான்கு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.

கடந்த போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய ஸ்டூவர் பிராட் மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜேக் லீச் மற்றும் மார்க் வுட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே போல் ஓலி போப் மற்றும் ரோரி பர்ன்ஸ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜேக் க்ராவ்லே மற்றும் ஜானி பாரிஸ்டோ ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர ஹசிப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பட்லர், ஓலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற வழக்கமான வீரர்கள் அனைவரும் பாக்சிங் டே போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்;

ஹசீப் ஹமீத், ஜேக் கிராவ்லே, டேவிட் மாலன், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜானி பாரிஸ்டோ, ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மார்க் வுட். ஓலி ராபின்சன், ஜேக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Mohamed:

This website uses cookies.