வீடியோ; என்னா ஸ்பீடுடா யப்பா… மின்னல் வேகத்தில் பந்துவீசிய மார்க் வுட்; ஸ்டெம்பை பறிகொடுத்த உஸ்மான் கவாஜா
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா 13 ரன்களில் விக்கெட்டை இழந்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி மிரட்டல் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (6-7-23) துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் 4 ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். கடந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த உஸ்மான் கவாஜா 13 ரன்கள் எடுத்திருந்த போது, மார்க் வுட் வீசிய 152 கி.மீ வேகப்பந்தில் சிக்கி ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
மார்க் வுட்டின் 152 கி.மீ வேகப்பந்தில் சிக்கி உஸ்மான் கவாஜா விக்கெட்டை இழந்த வீடியோ இங்கே;
ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு முக்கிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களிலும், லபுசேன் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதன் மூலம் போட்டியின் 28 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 98 ரன்கள் எடுத்துள்ளது.