ஆஷஷ் 2017/18 : 3-ம் நாளின் முடிவில் இங்கிலாந்து அணி 164 ரன்கள் முன்னிலை, குக் படைத்த சாதனைகளின் பட்டியல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அலாஸ்டர் குக் இரட்டைச் சதமெடுத்து அசத்தியுள்ளார். 3-ம் நாளின் முடிவில் இங்கிலாந்து அணி 164 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில், பாக்ஸிங் டே அன்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்யத் தீர்மானித்து. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 119 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 4, ஜேம்ஸ் ஆன்டர்சன் 3, கிறிஸ் வோக்ஸ் 2, டாம் கியுரன் ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.

Stuart Broad congratulates Alastair Cook on his double century, Australia v England, 4th Ashes Test, Melbourne, 3rd day, December 28, 2017

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, புதன்கிழமை முடிவில் 57 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. ஆட்டநேர முடிவில் அலாஸ்டர் குக் 104, கேப்டன் ஜோ ரூட் 49 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

Moeen Ali produced a frantic innings of 20, Australia v England, 4th Ashes Test, Melbourne, 3rd day, December 28, 2017

இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எனினும் அவர்களாக் குக்கின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஜோ ரூட் அரை சதமடித்து 61 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த வீரர்களால் நீண்ட நேரம் நிலைக்கமுடியாமல் வெளியேறினார். மறுமுனையில் வலுவாக விளையாடி வந்த குக், 360 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்து மெல்பர்ன் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார்.

151 டெஸ்டுகளில் 5 இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார் குக். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது முறையாக இரட்டைச் சதமெடுத்துள்ளார். 

Usman Khawaja suffered a faceplant as he held the catch to remove Stuart Broad, Australia v England, 4th Ashes Test, Melbourne, 3rd day, December 28, 2017குக்கு நல்ல இணையாக விளங்கிய பிராட் 59 ரன்களில் அரை சதமெடுத்தார். இருவரும் வேகமாக ரன்கள் சேர்த்து 9-வது விக்கெட்டுக்கு 107 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் 56 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பிராட். இந்த கேட்ச் மூன்றாவது நடுவர் வரை சென்று உறுதிப்படுத்தப்பட்டது.

Usman Khawaja suffered a faceplant as he held the catch to remove Stuart Broad, Australia v England, 4th Ashes Test, Melbourne, 3rd day, December 28, 2017

கேட்ச் பிடிக்கும்போது கீழே விழுந்த கவாஜா, தரையில் படாமல் பந்தைத் தாங்கிக்கொண்டதாக மூன்றாவது நடுவர் தீர்ப்பளித்தார். ஆனாலும் பந்து தரையில் பட்டதாகப் பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள். மூன்றாவது நடுவரின் தீர்ப்பு பிராடுக்குச் சாதகமாக இருந்திருக்கவேண்டும் என்றும் பலரும் அபிப்ராயப்பட்டார்கள்.

மூன்றாம் நாளின் முடிவில் இங்கிலாந்து அணி 144 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 491 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. குக் (244 ரன்கள்), ஆண்டர்சன் (0) களத்தில் உள்ளார்கள்.

* இந்த ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்தின் அலாஸ்டர் குக் டெஸ்ட் போட்டியில் தனது 32-ஆவது சதத்தை பூர்த்தி செய்து, டெஸ்ட் சதமடித்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக்குடன் 7-ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

* இத்துடன் ஆஸ்திரேலியாவில் தனது 5-ஆவது சதத்தை அடித்துள்ளார் அலாஸ்டர் குக். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரில் அந்த அணிக்கு எதிராக 5 அல்லது அதற்கு மேலான சதங்களை எட்டும் 5-ஆவது இங்கிலாந்து வீரர் குக் ஆவார்.

* அலாஸ்டர் குக் கடந்த 10 இன்னிங்ஸ்களில் அரைசதம் கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின்போது அரைசதம் கடந்த அவர், அதில் 243 ரன்கள் குவித்திருந்தார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தும் 8-ஆவது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஆவார். அதுவே, வேகப்பந்துவீச்சாளர் வரிசையில் அவர் 4-ஆவது வீரர்.

Editor:

This website uses cookies.