பயிற்சி போட்டியில் அஸ்வினுக்கு ஏன் ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை? வெளிவந்த உண்மையான காரணம்!!

புஜாரா சதத்துடன் பயிற்சி ஆட்ட முதல் இன்னிங்சில் இந்திய அணி 297/5 என்று டிக்ளேர் செய்ய தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 181 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்சில் சுருண்டது.

இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பும்ரா 11 ஓவர்கள் வீசி 45 ரன்கள் விக்கெட் இல்லை, நவ்தீப் சைனி வீசினார், ஜடேஜா 12 ஓவர்கள் வீசினார் ஆனால் அஸ்வினுக்கு பவுலிங் கொடுக்காதது ஏன் என்பது புரியாத புதிராக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 56.1 ஓவர்கள் ஆடியும் அஸ்வின் ஒரு ஓவர் கூடப் போடவில்லை என்பது எதனால் என்பது புரியவில்லை.

புதிய பந்தில் இஷாந்த் சர்மாதான் சிறப்பாக வீசினார், அவர் ஜெரெமி சோலோசானோ மற்றும் பி.ஏ. கிங் ஆகியோரை சடுதியில் வீழ்த்தி பிறகு அரைசதம் கண்ட ஹாட்ஜ் என்பவரையும் இஷாந்த் வீழ்த்தினார்.

இந்திய அணியின் கேப்டன் ரஹானே, 6 பவுலர்கள் வீசினர். ஆனால் அஸ்வின் பவுலிங் வீசவில்லை, டெஸ்ட் போட்டியில் ஆடவிருக்கும் அஸ்வின் பயிற்சி ஆட்டத்தில் வீசவில்லை என்றால் என்ன பொருள், அவருக்கு பவுலிங் கொடுக்கவில்லையா? அல்லது வேறு ஏதாவது உடல்நலக்குறைவு, காயம் காரணமா என்பதும் தெரியவில்லை.

பேட்டிங்கில் புதிய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மீண்டும் விரைவில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே முதல் இன்னிங்சில் சரியாக ஆடவில்லை இந்த முறை தொடக்கத்தில் இறங்கி 95 பந்துகளில் 20 ரன்கள் என்று அறுவை இன்னிங்ஸை ஆடினார். ஹனுமா விஹாரிதான் சரளமாக ஆடி 48 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இந்திய அணி 84 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று மொத்தம் 200 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறும், இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆட தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் ஆட்ட நேரம் முடிவுற்றதால் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்சில் அஸ்வினுக்கு 8 ஓவர் கொடுத்தார் கேப்டன் ரகானே. மொத்தம் இந்த ஆட்டத்தில் 8 ஓவர்கள் வீசி 4 ஓவர்கள் மெய்டன் ஓவர்களாக வீசினார். அஸ்வின் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அஸ்வினுக்கு முதல் ஆட்டத்தில் ஓவர் கொடுக்காததற்கு காரணம், அவர் ஏற்கனவே தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் தொடர்ந்து ஆடி கொண்டிருந்தார்.

மேலும், இந்தியாவிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு விமானத்தில் சென்று இறங்கிய அடுத்த நாளே பயிற்சி போட்டி ஆரம்பம் ஆகிவிட்டது. இதன் காரணமாக அவர் களைப்பில் இருந்தார் என்று தெரிகிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே அவருக்கு முதல் ஆட்டத்தில் ஒரு ஓவர் கூட கொடுக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய அணி சார்பில் இரண்டாவது இன்னிங்சில் பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் விழ்த்தினர்.

பயிற்சி ஆட்டம் முடிவுற்ற நிலையில், ஆண்டிகுவாவில் வருகின்ற வியாழன் அன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.