2021 ஐபிஎல் சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது என்று கூறுகிறார் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்..
2020 க்கான ஐபிஎல் போட்டித் தொடர் துபாய் அமீரகத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோப்பையை கைப்பற்றுவதற்கு கடுமையான போட்டி நிலவும் நிலையில் சிஎஸ்கே அணி இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாதது ரசிகர்கள் மத்தியி பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது மற்றும் அனுபவ வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படாதது என பலர் சிஎஸ்கே அணியை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
சிஎஸ்கே அணியில் பெரும்பாலும் 30 வயதிற்கு மேலான வீரர்களே இருப்பதாகவும் மற்றும் தோனியின் கேப்டன்சிப் குறித்தும் நெட்டிசன்கள் அனைவரும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக தன் கருத்தை கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது வயது என்பதில் விளையாட்டை பொருத்தவரை ஒரு விஷயமே கிடையாது என்றும்.
மேலும் தோனி ஒரு அனுபவம் வாய்ந்த உலகத்தில் சிறந்த கேப்டன் அவருடைய ஒவ்வொரு முடிவும் மிகத் தெளிவானதாகும் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்று தோனிக்கு தன் பாராட்டையும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணி வரும் 2021 காண ஐபிஎல் தொடரில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாமல் அதே அணி களமிறங்க அதிகமான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.