பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரும் ஆப்பு காத்துள்ளது; எச்சரிக்கும் ஆஷிஸ் நெஹ்ரா !!

பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரும் ஆப்பு காத்துள்ளது; எச்சரிக்கும் ஆஷிஸ் நெஹ்ரா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, நாடு முழுதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலையில், இந்தியாவில் 3000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் மீண்டும் துவங்க இன்னும் நாட்கள் ஆகும் என்பதால், அவர் அவர் வீடுகளில் முழு உடற்தகுதியுடன் இருக்க வீரர்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நீண்ட இடைவேளை என்பது பேட்ஸ்மேன்களை விட பவுலர்களுக்கு தான் மிகவும் ஆபத்தானது என முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் நெஹ்ரா தெரிவித்துள்ளார். குறிப்பாக மூன்று மாத இடைவேளைக்கு முன்பாக களத்துக்கு திரும்புவது தான் அவர்களுக்கு நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெஹ்ரா கூறுகையில், “ஒரு சின்ன உதராணத்தை எடுத்துக்கொள்வோம். லாக்டவுன் ஏப்ரல் 15 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது என எடுத்துக்கொண்டாலும். இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு நீண்ட நாட்களாகும். என்னைக் கேட்டால் ஜூலை மாதத்துக்கு முன்பாக கிரிக்கெட் போட்டிகள் திரும்புவது வாய்ப்பு குறைவு தான்.

அதுவே நீண்ட இடைவேளை தான். இது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக அவர்கள் முழு உடற்தகுதியுடன் இருப்பது தான் மிகப்பெரிய சவால் ஆனால் பேட்ஸ்மேன்களை பொறுத்தவரையில் யோகா அல்லது வெயிட் தூக்கினாலே போதும். ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சிறந்த ஓட்டம் இல்லை என்றால் சிக்கல் தான். இது தான் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு உள்ள மிகப்பெரிய வித்தியாசம்” என்றார்.

Mohamed:

This website uses cookies.