இதுக்கு மேல என் உடம்பு தாங்காது.. ஓய்வு அறிவித்த இந்திய வீரர்!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டின்டா தனது ஓய்வை அறிவித்தார்.


பெங்கால் அணியின் நட்சத்திர வீரரான அசோக் திண்டா இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் பங்கெடுத்து 12,17 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்,மேலும் 78 ஐபிஎல் போட்டியில் பங்கெடுத்து 69 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்,2005 முதல் பெங்கால் அணிக்காக விளையாடிய அஷோக் டிண்டா 420 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.அதில் 26 முறை 5விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

சமீபகாலமாக இவரால் எந்த போட்டியிலும் பங்கெடுக்க முடியவில்லை இதன் காரணமாக பெங்கால் ரஞ்சி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார்.இறுதியாக பெங்கால் அணியிலிருந்து விளகி கோவா அனிக்காக சையது முஷ்தாக் அலி போட்டியில் விளையாடினார்

கடின முயற்சியின் மற்றும் திறமையின் மூலம் பலமுறை கிரிக்கெட் ரசிகர்கள் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இந்நிலையில் 36 வயதாகும் அசோக் திண்டா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதுபற்றி அசோக்கின் கூறியதாவது இன்றுமுதல் நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து விடை பெறுகிறேன்.என்னுடைய உடல் இதற்க்கு மேல் ஒத்துழைக்கவில்லை என்னுடைய பெற்றோர்கள்மற்றும் நண்பர்கள் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவி செய்துள்ளனர் அதற்கு நான் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிரேன், மேலும் எனது பாதுகாவலராக செயல்பட்ட சவுரவ் கங்குலிக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Mohamed:

This website uses cookies.