டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட்டா நானு..6 விக்கெட் எடுத்து இந்தியாவை ஆட்டத்திற்குள் கொண்டுவந்த அஸ்வின்.. அதிரடியாக ஆரம்பித்த ரோகித்-கில் ஜோடி!

முதல் இன்னிங்சில் 480 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா அணி. 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் அடித்திருந்தது. களத்தில் சதத்துடன் கவாஜா இருந்தார். அரைசதத்தை நெருங்கிய நிலையில் கிரீன் இருந்தார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய கவாஜா-கிரீன் ஜோடி இந்திய பவுலர்களுக்கு கடும் சிக்கலை மேன்மேலும் ஏற்படுத்தினர். உணவு இடைவேளை வரை இந்த ஜோடியின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் மிகவும் திணறினர்.

நடுவில் கவாஜா 150 ரன்களை கடந்து விளையாடிக்கொண்டிருந்தார். கேமரூன் கிரீன் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். இரண்டாம் நாள் உணவு இடைவேளை முடிந்து வந்த பிறகு, சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை அடித்தார் கேமரூன் கிரீன். ஆஸ்திரேலியா அணியை வலுவான ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார்.

 

அப்போது உள்ளே வந்த ரவிச்சந்திரன் அஸ்வின லாவகமாக ட்ரிக்ஸ் செய்து கேமரூன் கிரீன் விக்கெட்டை வீழ்த்தினார். இவர் 114 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அஸ்வின் வீசிய அதே ஓவரில் அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்க இந்திய அணி மெல்ல மெல்ல ஆட்டத்திற்குள் திரும்பியது. அதன்பின் ஸ்டார்க்கை 6 ரன்களில் விக்கெட் எடுத்தார் அஸ்வின்.

அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் அசத்தினார். அந்த நேரத்தில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு நேத்தன் லயன்(34) மற்றும் மர்பி(41) இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தினர். கடைசியில் அவர்களது விக்கட்டையும் கைப்பற்றி முதல் இன்னிங்ஸில் மொத்தம் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். ஆஸ்திரேலியா அணி 480 களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மண் கில்(18) மற்றும் ரோகித் சர்மா(17) இருவரும் விக்கெட் இழக்காமல் நிதானமாக விளையாடினர். நாள் முடிவில் இந்திய அணி 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியை விட 444 ரன்கள் பின்தங்கி நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.