எந்த இந்தியரும் செய்யாத சாதனையை அசால்டாக செய்த அஸ்வின்!

வங்காளதேச அணிக்கெதிராக முதல் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.

இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

முதல் விக்கெட்டாக மொமினுல் ஹக்கை க்ளீன் போல்டு மூலம் வீழ்த்தினார். இது அஸ்வினுக்கு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்டில் கைப்பற்றிய 250-வது விக்கெட்டாகும்.

இந்த விக்கெட்டுக்களை வீழ்த்த அவருக்கு 42 போட்டிகளே தேவைப்பட்டது. இதன்மூலம் சொந்த மண்ணில் அதிகவேகமாக 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முரளிதரனுடன் பகிர்ந்துள்ளார்.

அனில் கும்ப்ளே 43 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். ரங்கணா ஹெராத் 44 போட்டிகளிலும், ஸ்டெயின் 49 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 51 போட்டிகளிலும் 250 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்பிகூர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்திருந்த போது அபு ஜெயத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து மாயங்க் அகர்வால் மற்றும் புஜாரா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 43 ரன்களுடனும், மாயங்க் அகர்வால் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இந்திய அணி பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 64 ரன்கள் பின் தங்கியுள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.