ஐபிஎல் தொடரின் 16வது போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே மொகாலியில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுலும் கிறிஸ் கெயிலும் களமிறங்கினர்.
ஸ்கோர் 53 ரன்னாக இருக்கும்போது ராகுல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய அகர்வால் 18 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கருண் நாயர் 21 பந்துகளில் 31ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பின்ச் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதேசமயம், அதிரடி ஆட்டம் ஆடிய கிறிஸ் கெயில் 63 பந்துகளில் 11 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 104 ரன்கள் இறுதி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
20ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து பஞ்சாப் அணி 193 ரன்கள் எடுத்தது.
ஹைதராபாத் அணி சார்பில் ரஷித் கான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 194 ரன்கள் வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹா , தவான் களம் இறங்கினர். தவான் காயம் காரணமாக வெளியேறினார். சாஹா 7 பந்துகளில் 6ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ஆட்டத்தை தொடர்ந்த வில்லியம்சன் 41 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பதான் 19 ரன்களும், ஹூடா 5 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் வெற்றி இலக்கான 194 எடுக்க முடியாமல் திணறிய ஹைதராபாத் அணி, 4 விக்கெட்களை இழந்து 178ரன்கள் மட்டுமே எடுத்தது. பாண்டே 57 ரன்களுடனும், ஹசன் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் ச்ர்மா, டை ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து, பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.