இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் இரு சதங்கள் விளாசிய ரோஹித் சர்மாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் ஆடிய ஆட்டத்தில் இருபது ஓவர் தொடரை வென்றது. அதேசமயம் ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது இதில் முதல் 3 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி கேப்டனாகவும், அஜிங்கா ரஹானே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் போட்டியில் வழக்கமாக விளையாடும் விருத்திமான் சாஹா காயமடைந்துள்ள நிலையில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியின்போது, காயமடைந்த ஜஸ்பீரித் பும்ரா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ்வும் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர்கள் தவிர, கருண் நாயர், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட 18 வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதுகுவலி காரணமாக அவதியுற்று வரும் புவனேஸ்வர் குமார் 18 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம் பெறவில்லை
Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் இரு சதங்கள் விளாசிய ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.