ஐ.பி.எல்., தொடரில் மீண்டும் களமிறங்கும் சென்னை அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, ஜடேஜாவுடன் அஷ்வின் எப்படியும் இடம் பெறுவார் என நம்பப்பட்டது. இவரை தக்கவைக்க கிடைத்த வாய்ப்பை, சென்னை அணி நிர்வாகம் கோட்டை விட, பஞ்சாப் அணிக்கு சென்றார் அஷ்வின்.
இதுகுறித்து அவர் வெ ளியிட்ட ‘டுவிட்டர்,’ செய்தியில்,’ ஏலம் என்பது எப்போதும் நிலையில்லாதது. பஞ்சாப் அணிக்கு சென்றது மகிழ்ச்சி. இது தான் எனது புதிய அணி. சென்னை அணியுடனான எனது நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்,’ என, சோகத்துடன் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் தெரிவித்து சென்னை அணி வெ ளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,’ ஒரு சிறந்த அணியில் இருந்து, மற்றொரு சிறந்த அணிக்கு சென்றுள்ளீர்கள், வாழ்த்துக்கள் அஷ்வின், சிறப்பான நினைவுகளுக்கு ‘விசில்’ போடுங்க,’ என, தெரிவித்துள்ளது.
காரணம் என்ன
தோனியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக இருந்தவர் அஷ்வின். இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிய பிறகு, கோஹ்லியுடன் இணைந்தார் அஷ்வின். தனது வளர்ச்சியில் கோஹ்லி, கும்ளேவுக்கு பங்குள்ளது என்ற அஷ்வின், தோனியை மறந்து விட்டார்.