பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 54 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்தார். கருண் நாயர் 31 ரன்களும் ஸ்டோயினிஸ் 23 ரன்களும் எடுத்தனர். முஜிபுர் ரகுமான் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டிக்குப் பின் பேசிய பஞ்சாப் கேப்டன் அஸ்வின், ‘கடந்த சில போட்டிகளில் நாங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் புள்ளிப்பட்டியலில் முன்னேறவில்லை. பதற்றம் இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று முன்னேறி இருக்கிறோம். ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்றுவிட்டால் அது போதுமானது. எங்களின் கடந்த சில வெற்றி, பந்துவீச்சாளர்களால் கிடைத்தது. நான் கேப்டனாக திறந்த மனதுடன் வந்தேன். அணியை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். கேப்டன் பொறுப்பு என்பது, பீல்டிங்கை அமைப்பது, பந்துவீச்சாளர்களை மாற்றுவது, சரியான பேட்டிங் ஆர்டரை திட்டமிடுவதுதான். டி20 போட்டிகளில், பந்துவீச்சாளர்கள்தான் தாக்கப்படுவார்கள். யாராவது ஒருவர் நின்று நன்றாக பேட்டிங் செய்தால், அணி அடுத்த சுற்றுக்கு செல்ல அது உதவும்’ என்றார்.
54 பந்துகளில் 84 ரன்கள் குவித்த கே.எல்.ராகுல் கூறும்போது, ‘அதிக நேரம் நின்று ரன்கள் குவித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அணியை வெற்றிபெற வைத்திருக்கிறேன். இந்த ஐபிஎல் தொடர் எனக்கு அதிக நம்பிக்கையை அளித்திருக்கிறது. அணி, அடுத்தக்கட்டத்துக்கு செல்ல இந்த வெற்றி முக்கியம் என்று நினைத்து அடித்து ஆடினேன். அதன்படியே நடந்தது.