ஐசிசி அறிவித்துள்ள புதிய விருதிற்கு இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் அஸ்வின் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன.
ஆண்டுதோறும் அந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கௌரவிக்கும் விதமாக ஐசிசி பல விருதுகளை வழங்குவது வழக்கம். இந்த வழக்கமானது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வீரர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரருக்கு அந்த மாதத்திற்கான விருது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்க்கு இந்திய வீரர்கள் அஸ்வின், சிராஜ், நடராஜன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இடம்பெற்றிருக்கின்றன. அதேநேரம் தற்போது நடந்து முடிந்த இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரில் ஜோ ரூட் சிறப்பாக செயல்பட்டதால் அவரும் இந்த பட்டியலில் இருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இடம் பெற்றிருக்கிறார். இது மட்டுமல்லாது தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது அளிக்கப்படும் மாதாந்திர சிறந்த வீரருக்கான விருது ஜனவரி மாதம் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மட்டுமே. இதே போல் அடுத்து வரும் பிப்ரவரி மாதத்திலும் அந்த மாதத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுமென ஐசிசி தரப்பு தெரிவித்திருக்கிறது. வருடம் முழுவதும் இல்லை என்றாலும் ஒரு சில மாதங்களில் சிறப்பாக செயல்பட்டவர் வீரர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாதெமியும், ரசிகா்களுடன் இதில் இணைந்து செயல்படும். விருதுக்கு தகுதியான நபா்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவாா்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது. வெற்றியாளா்கள் ஒவ்வொரு மாதத்திலும் அதன் 2-ஆவது திங்கள்கிழமை அறிவிக்கப்படவுள்ளனா்.