ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட முடியாததற்கு காரணம் இவர்கள் தான் ; போட்டுடைக்கும் அஸ்வின்

ஸ்போர்ட்ஸ்டார் ஊடகத்துக்கு அஸ்வின் அளித்த பேட்டியில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தன்னிடத்தில் கிரிக்கெட் ஆடுவதின் மகிழ்ச்சியை மீண்டும் கண்டுபிடித்துக் கொள்ள உதவியது என்று கூறியதோடு 2017-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய அணித்தேர்வில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தன்னைப் பாதித்த விதத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2017-ம் ஆண்டு என் கிரிக்கெட் வாழ்க்கை ஏற்றமும் தாழ்வும் கண்டது. இங்கிலாந்திலிருந்து சாம்பியன்ஸ் ட்ராபி ஆடிவிட்டு திரும்பும் போது இலங்கைத் தொடருக்கு இந்திய அணி செல்லும் வேளையில் அணித்தேர்வாளர்கள் என்னை அழைத்து இலங்கைத் தொடரில் நான் தேர்வு செய்யப்பட மாட்டேன் என்றார்கள். அதாவது வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தப் போவதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, தொந்தரவுக்குள்ளான காலக்கட்டமாக அமைந்தது. அதாவது ஏன் இப்படி நடக்கிறது என்ற பொருளில் எனக்கு தொந்தரவாக இருந்தது. ஏனெனில் இதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நான் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த அளவே ஆடினேன், காரணம் டெஸ்ட் போட்டிகளில் என்னை நான் ஒரு முன்னணி பவுலராக்கிக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவே.

எனவேதான் இங்கிலாந்த் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுவது ஆட்டத்தின் மீதான என் பற்றுதலை மறுகண்டுபிடிப்பு செய்து கொள்ள உதவும் என்று கருதினேன். ஏனெனில் கிரிக்கெட் ஆடுவதன் மீதான மகிழ்ச்சியை கொஞ்சம் இழந்திருந்தேன். இது ஆட்டத்தின் மீதான மகிழ்ச்சியிழப்பு அல்ல, வேறு வேறு இடங்களில் வேறு வேறு காலக்கட்டங்களில் ஆடுவது சலிப்பூட்டியது. எனவே என் மீதான கவனத்திலிருந்து விலகிச் செல்ல கிரிக்கெட்டை கொஞ்சம் ஆடுவோம் என்று முடிவெடுத்தேன். வொர்ஸ்டர் ஷயர் எனக்கு வாய்ப்பளித்தது, இங்கிலாந்து கவுண்ட்டியில் ஆட வாய்ப்புக் கிடைப்பது சுலபமல்ல…கடந்த 8-12 மாதங்களாக சில விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

2009-ல் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தது முதல் 10 ஆண்டுகளாக மிகத்தீவிர களத்தில் நான் தினமும் கிரிக்கெட் ஆடிப் பழகியவன். அனைத்து வடிவங்களிலும் ஆடி வந்தேன். ஆனால் திடீர் மாற்றங்களினால் என் பணிச்சுமை அத்தகைய நிலையிலிருந்து குறைந்தது. எனவே பணிச்சுமையை நிர்வகிக்கும் பணியைத் தவிர்த்தேன்.

மீண்டும் இங்கிலாந்துக்கு வந்த போது என் 10 ஆண்டுகால பணிச்சுமை மீண்டும் எனக்கு வந்தது. அதாவது கடந்த 6-8 மாதங்களாக எனக்கு பணிச்சுமை அவ்வளவாக இல்லாத நிலையில் திடீரென இங்கிலாந்தில் எனது கடந்த 10 ஆண்டு பணிச்சுமை ஏற்பட்ட போது என்னால் சமாளிக்க முடியவில்லை.

India is leading the five-match-ODI-series 1-0. / AFP PHOTO / Jewel SAMAD (Photo credit should read JEWEL SAMAD/AFP/Getty Images)

ஆஸ்திரேலியா தொடருக்குச் சென்ற போதும் இப்படித்தான் ஆனது, ஏனெனில் அதற்கு முன் தொடர்ச்சியாக ஆடாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடியதால் திடீரென அதன் தீவிரத்தை நிர்வகிக்க முடியவில்லை. இது இனி நடக்கக் கூடாது என்று முடிவு கட்டினேன், இனி எங்கிருந்தாலும் மூன்று ஸ்டம்ப் இருந்தால் கிரிக்கெட் ஆட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன். இது என் ஆட்டத்தை நான் மகிழ்வுடன் ஆட முடியச் செய்தது. இங்கிலாந்து கவுண்டி எனக்கு இதைத்தான் கற்றுக் கொடுத்தது”

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

Sathish Kumar:

This website uses cookies.