அஸ்வினின் பந்துவீச்சை அசால்டாக பிரித்து மேய்ந்த இங்கிலாந்து வீரர் !!

அஸ்வினின் பந்துவீச்சை அசால்டாக பிரித்து மேய்ந்த இங்கிலாந்து வீரர்

இந்திய அணியில் அஸ்வினை எடுக்கவில்லை என்பதற்காக பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் நாட்டிங்கம்ஷயர் அணிக்காக ஆடும் ரவிச்சந்திரன் அஸ்வின் கென்ட் அணிக்கு எதிரான கவுண்ட்டி போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 121 ரன்களைக் கசியவிட்டார்.

ஸ்பின் எடுக்கும் நாட்டிங்கம் பிட்சில் அஸ்வின் முதலில் 17 ஓவர்களில் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் அஸ்வின். அந்த நிலையில்தான் 43 வயது டேரன் இவான் ஸ்டீவன்ஸ் இறங்கி 90 பந்துகளில் 88 ரன்களை விளாசித் தள்ளினார். இதில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும்.

17 ஓவர்களில் 35/4 என்று அசத்திய அஸ்வின் பந்து வீச்சை 43 வயது ஸ்டீவன்ஸ் புரட்டி எடுக்க அஸ்வினின் இறுதி அனாலிசிஸ் 32 ஒவர்கள் 121 ரன்கள் 4 விக்கெட் என்று முடிந்தது.

65 டெஸ்ட் போட்டிகளை இந்திய அணிக்காக ஆடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போதும் இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர்தான் என்று மூத்த ஸ்பின்னர் அனில் கும்ப்ளே அன்று புகழாரம் சூட்டியிருந்தார். ஆனால் ஸ்டீவன்ஸ் அதையெல்லாம் படித்திருக்க வாய்ப்பில்லை.

அஸ்வினின் 40 பந்துகளை எதிர்கொண்ட ஸ்டீவன்ஸ் 2 மிகப்பெரிய சிக்சர்களுடன் 54 ரன்களை அஸ்வினுக்கு எதிராக மட்டுமே விளாசித்தள்ளியுள்ளார்.

ஒரு சிக்சர் வந்தவுடனேயே லாங் ஆஃப் மேல், இன்னொன்று ஸ்லாக் ஸ்வீப் சிக்சர். அதாவது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயிருந்து வாங்கி இழுத்தார். இவரது இந்த இன்னிங்ஸினால் அஸ்வினின் அனாலிசிஸ் காலியானதோடு நாட்டிங்கம் அணி டிவிஷன் 2க்கு சரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஸ்டீவன்ஸ் இந்த சீசனில் 14 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு அரைசதம்தான் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது இந்த இன்னிங்ஸினால் கெண்ட் அணி 188/6 என்ற நிலையிலிருந்து 304 ரன்களை எடுக்க முடிந்தது.

 

Mohamed:

This website uses cookies.