12 விக்கெட்டுகள், அரைசதம்.. கவுண்டி போட்டியில் கலக்கும் அஸ்வின்!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக அசத்தி வருகிறார் ஆர் அஸ்வின்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவருக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் இடம் கிடைக்காததால், முழுநேர டெஸ்ட் வீரராக மாறிவிட்டார். கடைசியாக 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுபயணத்தின் போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான அணியில் இடம்பெற்றார். அதன்பிறகு இவருக்கு சிறிது காலம் ஓய்வு அளிக்கப்பட்டு குலதீப் யாதவ் க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டதால், அஸ்வினுக்கு அதன்பிறகு அணியில் இடம்பெற முடியவில்லை.

ADELAIDE, AUSTRALIA – DECEMBER 07: Ravichandran Ashwin and Rishabh Pant of India celebrate getting the wicket of Marcus Harris of Australia during day two of the First Test match in the series between Australia and India at Adelaide Oval on December 07, 2018 in Adelaide, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)

இங்கிலாந்தின் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் சர்ரே அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். அதேபோல் 2-வது இன்னிங்சிலும் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இரண்டு இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசியதோடு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்தார்.

இவர் நன்றாக செயல்பட்டிருந்தாலும், இறுதியாக நாட்டிங்காம்ஷைர் அணி சர்ரெ அணியிடம் 167 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மேற்கிந்திய தீவுகள் உடன் நடக்கும் டெஸ்ட் தொடரில் அஸ்வின் நிச்சயம் இடம்பெறுவார் என தெரிகிறது. இவருக்கு ஸ்பின் ஜோடியாக ரவீந்திர ஜடேஜா எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மேற்கிந்திய தீவுகள் செல்லும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணி விவரம் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Prabhu Soundar:

This website uses cookies.