நேற்று டெஸ்ட் நம்பர் 1 பவுலர், இன்று கபில் தேவ் ரெக்கார்ட் காலி.. ஒரே டெஸ்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் தமிழ் பையன் அஸ்வின்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களுக்கு மத்தியில், கபில் தேவ் இருந்த மூன்றாம் இடத்தை தட்டிப்பறித்த ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்திருக்கிறார்.

இந்திய அணியின் நட்சத்திர சூழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஒரு நாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகள், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெடுகளை கைப்பற்றியுள்ளார். 3வது டெஸ்டுக்கு முன்புவரை டெஸ்ட் போட்டிகளில் 170 இன்னிங்ஸ் விளையாடி 465 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அனைத்துவித போட்டிகளிலும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக 687 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அனைத்துவித போட்டிகளிலும், 688வது விக்கெட்டை இந்திய அணிக்காக கைப்பற்றினார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன் மூலம் இந்திய அணியின் ஜாம்பவான் கபில்தேவ் இடத்தை பின்னுக்குத்தள்ளி இந்திய வீரர்கள் மத்தியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னேறியுள்ளார்.

கபில் தேவ் அனைத்துவித போட்டிகளிலும் சேர்த்து 687 விக்கெட்டுகளுடன் 4வது இடத்தில் உள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முந்தைய இடங்களில் 953 விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே முதல் இடத்திலும் 707 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

அனைத்துவித போட்டிகளிலும் சேர்த்து அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள்

1. அனில் கும்ப்ளே – 499 இன்னிங்ஸ் – 953 விக்கெட்டுகள்

2. ஹர்பஜன் சிங் – 442 இன்னிங்ஸ் – 707 விக்கெட்டுகள்

3. அஸ்வின் – 347 இன்னிங்ஸ் – 689 விக்கெட்டுகள்

4. கபில் தேவ் – 448 இன்னிங்ஸ் – 687 விக்கெட்டுகள்

5. ஜாஹீர் கான் – 373 இன்னிங்ஸ் – 597 இன்னிங்ஸ்.

தரவரிசையில் அஸ்வின் முதலிடம்..

டெஸ்ட் போட்டிக்கான பவுலிங் தரவரிசையில், 8 வருடங்களுக்கு பிறகு அஸ்வின் முதலிடம் பிடித்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் முன்னதாக முதலிடம் பிடித்திருந்தார். அவரது புள்ளிகள் குறைத்தால், அஸ்வின் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Mohamed:

This website uses cookies.