“எனக்கு அந்த பழக்கம் இல்லை. இனி நான் யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்து என்று ட்வீட் போடமாட்டேன். வதந்திகளை பரப்புபவர்களே உங்களுக்கு தான் இது.” என்று வெறுப்புடன் தோனிக்கு பர்த்டே விஷ் செய்துள்ளார் அஸ்வின்.
சர்வதேச இந்திய அணிக்கு பெஸ்ட் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என வரிசையாக ஐசிசி நடத்தும் கோப்பைகளை வென்றது.
தோனி எந்த அளவிற்கு சிறந்த கேப்டன் என்றால், இவர் சென்ற பிறகு இந்திய அணி கிட்டத்தட்ட 11 வருடங்களாக ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் திணறி வருகிறது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று, அதிக முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சமநிலையில் இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு அடுத்த இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு கோப்பைகளுடன் இருப்பது குறிப்பிடதக்கது. அந்த அளவிற்கு ஐபிஎல் தொடரிலும் சிறந்த கேப்டனாக திகழ்ந்திருக்கிறார்.
இன்று பிறந்தநாள் காணும் மகேந்திர சிங் தோனிக்கு உலகமே வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவருடன் சிஎஸ்கே மற்றும் இந்திய அணியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் வெறுப்புடன் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தது பலரையும் சற்று வருத்தப்பட வைத்திருக்கிறது.
அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டதாவது:
“ஜூலை 7ஆம் தேதி மட்டும் நான் வாழ்த்து சொல்லாமல் வேறு ட்வீட் போட்டால் எனக்கு பேரிடரில் மாட்டிக்கொள்வேன். இதனால் தோனிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” என்று வெறுப்புடன் வாழ்த்து செய்தியை பதிவிட்டார்.
மேலும், ” நான் யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ட்வீட் போடமாட்டேன் என்பதை எல்லோருக்கும் சொல்லிக்கொள்கிறேன். குறிப்பாக வதந்திகளை பரப்புபவர்களுக்கு சொல்லிவிடுகிறேன்.” என்றும் டீவீட்டில் குறிப்பிட்டிருந்தார்.