தலைவர் பாசத்துல ரஜினி ரசிகர்களை ஓவர்டேக் பண்ணிய ரவி அஸ்வின்

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை இன்று (டிசம்பர் 12) கொண்டாடுகிறார். இதனை ஒட்டி இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

பேருந்தில் கண்டக்டராக பனி புரிந்து கொண்டிருந்த ரஜினி சினிமாவில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு இப்போது இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து, பல பேருக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.

அவ்வகையில் தமிழகம் மட்டும் இல்லாமல் அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு. அவரது அண்ணாமலை படத்தில் ஒரு டைலாக் அந்த காலத்தில் நன்றாக பரவியது. அதே டைலாக்கை கூறி சூப்பர்ஸ்டார் ரஜினி காந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவி அஸ்வின்.

தனது ட்விட்டரில் பக்கத்தில் அவர் பதிவிட்ட வீடியோவில், அண்ணாமலை படத்தில் வரும் டைலாக் இடம் பெற்றிருந்தது.

“என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிட்டு சிவனேனு என் வழில போய்ட்டு இருக்க… என்ன வம்புக்கு இழுக்காதீங்க.. வம்புக்கு இழுத்தா, நான் சொல்றதையும் செய்வ, சொல்லாததையும் செய்வ..” என்ற டைலாக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்தார் அஸ்வின்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பல வருடமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, தமிழக சூப்பர் ஸ்டாருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.