ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் உலகின் தலை சிறந்த வீரர்கள்; பாகிஸ்தான் கேப்டன் புகழாரம் !!

ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் உலகின் தலை சிறந்த வீரர்கள்; பாகிஸ்தான் கேப்டன் புகழாரம்

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளர்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் வல்லரசை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தது. மகமதுல்லா ஷகிதி சிறப்பாக ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான், இமாம் உல் ஹக், பாபர் அசம் மற்றும் சோயப் மாலிக்கின் பொறுப்பான ஆட்டத்தால் 7 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியான ஆஃப்கானிஸ்தான் அணி, கிரிக்கெட் வல்லரசுகளில் ஒன்றான பாகிஸ்தானை திணறடித்து தோல்வியின் விளிம்பு வரை அழைத்து சென்றது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சியை அளித்தது. மேலும் இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்திருந்தாலும் ஆஃப்கானிஸ்தான் வீரர்களின் போராட்டத்திற்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாராட்டு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான சர்பராஸ் அஹமதும் ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை மனதார பாராட்டியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

இமாம் உல் ஹக், பாபர் அசம்  மற்றும் சோயப் மாலிக்கின் திறமையான பேட்டிங்கால்தான் எங்களால் 258 ரன்களை எடுத்து வெற்றிபெற முடிந்தது.

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சுழல் பந்துவீச்சாளர்கள் உலகிலேயே தலைசிறந்து விளங்கி வருகின்றனர். அவர்கள் பந்து வீச்சினால் எங்களை திணறடித்து விட்டனர் என தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.