இந்திய அணியை வீழ்த்த காத்துள்ளோம்; பாகிஸ்தான் கேப்டன் வீராப்பு !!

இந்திய அணியை வீழ்த்த காத்துள்ளோம்; பாகிஸ்தான் கேப்டன் வீராப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை சமாளிக்க தேவையான அனைத்து திட்டங்களும் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

இந்நிலையில் 14-வது ஆசியக் கோப்பைப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்துள்ள நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கான அனைத்து திட்டங்களும் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

இது குறித்து சர்பராஸ் அஹமது கூறியதாவது, “ஒரு கேப்டனாக ஹாங்காங் அணி உடனான போட்டியில், பல விஷயங்களை கவனித்தேன். 9 அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். புதிய பந்துகளில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் ஆகிய 3 பிரிவுகளிலும் அதிகபட்ச திறமையை வெளிக்காட்ட தமது வீரர்கள் துடிப்பாக உள்ளனர். இதனால், இந்திய அணியை வெல்ல இந்த மூன்று துறைகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும்” என்றார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி;

ரோகித் சர்மா (கேப்டன்), தவான் (து.கேப்டன்), கே.எல்.ராகுல், அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர் திக் பாண்ட்யா, குல்திப் யாதவ், சேஹல், அக்‌ஷர் படேல், புவனேஷ்வர்குமார், பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது.

Mohamed:

This website uses cookies.