பாகிஸ்தானை அடுத்தடுத்து வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது; சகால்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றின் முக்கிய ஆட்டமான நேற்றைய போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, இமாம் உல் ஹக்கும், ஃபக்கர் சமானும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்தன.

 

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர் குமார் மிகத் துல்லியமாக வீசி பகார் ஜமானையும், இமாம் உல் ஹக்கையும் திணற அடித்தனர். கவாஸ்கர் கூறியது போல் இந்த பேட்டிங் சாதக பிட்சில் கட்டுக்கோப்பான பந்து வீச்சே கட்டுப்படுத்தும். அதனை திறம்படச் செய்தனர்.

பும்ரா 6 ஓவர்களில் 1 மெய்டனுடன் 13 ரன்களை மட்டும் கொடுக்க, புவனேஷ்வர் 4 ஓவர்களில் 8 ரன்களே கொடுத்தார் இருவரும் 8 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தனர்.

சாஹல் பவர் பிளேவுக்குள் 8வது ஓவரே கொண்டு வரப்பட்டார். ரோஹித் சர்மாவின் இந்த கேப்டன்சி சாதுரியமானது, பயனளித்தது. இமாம் உல் ஹக் 10 ரன்களில் சாஹல் வீசிய பந்தை பிளிக் ஆட முயன்று தோற்றார் கால்காப்பில் பட எல்.பி.ஆனார். 10 ரன்களில் வெளியேறினார். ஒருநாள் போட்டிகளில் முதன் முதலாக பவர் பிளேவுக்குள் சாஹல் விக்கெட் எடுத்தார்.

பகார் ஜமான் 36 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை, பந்து வீச்சு அவ்வளவு துல்லியமாக அமைந்தது. கடைசியில் வெறுப்பாகி குல்தீப் யாதவ்வை ஸ்லாக் ஸ்வீப் ஆடி மிட்விக்கெட் மேல் மிகப்பெரிய சிக்சரை அடித்தார். பிறகு 15வது ஓவரில் இன்னொரு ஸ்லாக் ஸ்வீப் நான்கு ரன்களை எடுத்த ஜமான் குல்தீப் யாதவ் ஒரு பந்தை தூக்கி வீசி ஆசைக் காட்ட ஆட முயன்று பேலன்ஸ் தவறினார்.

பந்து கிளவ்வில் பட்டது தெரியாமல் எல்.பி.தீர்ப்பளித்தார் நடுவர் டக்கர். ரிவியூ செய்திருந்தால் தப்பித்திருக்கலாம் ஏனோ ரிவியூ செய்யாமல் சென்றார். 31 ரன்களில் அவர் வெளியேறினார். பாவம் நாட் அவுட்.

அடுத்ததாக பாகிஸ்தானின் பார்மில் உள்ள பாபர் ஆஸம் 9 ரன்களில் கேப்டன் சர்பராஸ் பாயிண்டில் தட்டி விட்டு பாபர் ஆஸமை சிங்கிளுக்கு இழுத்து விட்டு பிறகு திரும்பிப் போகச் சொன்னார், ஆனால் சாஹல் ஜடேஜாவுக்கு த்ரோவை செய்ய ரன் அவுட் ஆனார் பாபர் ஆஸம். 15.5 ஓவர்களில் 58/3.

Rajeshwaran Naveen: Cricket Fan - Dhoni Lover - CSK Forever

This website uses cookies.