இந்திய அணியின் பகுதி நேர பந்து வீச்சாளரான கேதர் ஜாதவை ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
கேதர்ஜாதாவை, ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும்- கவாஸ்கர்
இந்திய அணியின் பகுதி நேர பந்து வீச்சாளரான கேதர் ஜாதவை ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அவரை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-
கேதர் ஜாதவ் ஆல்-ரவுண்டராக திகழ்வதை செய்து காட்டினார்.
அவரது பந்துவீச்சை எதிரணியினர் கணிக்க சிரமப்படுகின்றன. அவர் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகிறார். முதன்மை பந்து வீச்சாளர்கள் சிரமப்படும் போது கேப்டனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கேதர் ஜாதவ் உள்ளார். அவரை ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும் என்றார்.
கேதர் ஜாதவவ் தற்போது இந்திய அணியில் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக 2016ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தோனிதான் அவரை பந்துவீச்சாளராக அறிமுகம் செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
“தோனி என்னை பந்து வீச்சாளராக அறிமுகப்படுத்திய பின்னர் என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. பயிற்சியின் போது நான் அதிக பந்துவீச மாட்டேன். நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் பயிற்சியின் போது சில ஓவர்கள் மட்டுமே பந்துவீசி பயிற்சி எடுப்பேன்.
33 வயதான கேதர் ஜாதவ் உண்மையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தான். தற்போது அவர் ஒரு ஆல் ரவுண்டராக உருவெடுத்துள்ளார். அதேபோல், பீல்டிங்கிலும் கேதர் படு சுட்டி. அதனால், பல நேரங்களில் பீல்டிங்கால் காயம் அடைந்துவிடுகிறார். சமீபத்தில் கூட கேதர் அறுவை சிகிச்சை ஒன்றினை செய்து கொண்டார். காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய அவர் ஆசியக் கோப்பையில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
“பேட்டிங்கை பொறுத்தவரை என்னுடைய ரோல் பினிஷர். அணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அது இருக்கும். அதனைதான் நாங்கள் பின்பற்றுவோம். போட்டியின் இறுதிவரை நின்று விளையாட வேண்டும் என்பது என்னுடைய திட்டம்” என்கிறார் கேதர்.