ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் சுருண்டது.
இதனால், இந்தியாவிற்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.ரோகித் சர்மா தனது அரை சதத்தினை பதிவு செய்து அசத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக ரோகித் சர்மா 52 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். பின்னர் அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 29 ஒவர்களிலேயே 164 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர்.
2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்து பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
அட்டவணையை மாற்றியது தொடர்பாக ஆசியக் கிரிக்கெட் சங்கத்தின் தலையீடு அதிகமாக இருந்திருக்கக் கூடும். இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சர்பராஸ் அகமதின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பி.சி.சி.ஐ-யின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,
பி.சி.சி.ஐ. விளக்கம்
‘அபுதாபியில் இருக்கும் ஐயாத் மைதானத்தை விட துபாயில் இருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மிகப் பெரியது. ஏறக்குறைய 30 ஆயிரம் பார்வையாளர்கள் போட்டியை நேரில் கண்டுகளிக்கலாம். அதிகப்படியான ரசிகர்கள் போட்டியை கண்டு மகிழ வேண்டும் என்பதற்காகவே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.