வங்கதேசத்திற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா !!

வங்கதேசத்திற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியுடனான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சான துபாயில் நடைபெற்று வருகிறது, கடந்த 15ம் தேதி துவங்கிய இந்த தொடரில் இதுவரை ஐந்து போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வங்கதேசமும் மோதுகின்றன.


இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணியுடனான கடந்த போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் விளையாடவில்லை, அவருக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி;

ரோஹித் சர்மா, ஷிகர் தவான்,  அம்பத்தி ராயூடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்

வங்கதேச அணி;

லிடான் தாஸ், நஸ்முல் ஹூசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிகுர் ரஹிம், முகமது மிதுன், மஹ்மதுல்லாஹ், மொசாதாக் ஹுசைன், மெஹ்தி ஹசன், மஸ்ரஃபே மோர்டசா, ரூபல் ஹூசைன், முஸ்தபிசுர் ரஹ்மான்.

 

Mohamed:

This website uses cookies.