20 ஓவர் கொண்ட ஆசிய கோப்பை தொடர் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. கொரோனா காரணமாக அந்த தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. சூழ்நிலை சரியாக வராத காரணத்தினால் பின்னர் மீண்டும் ஆசிய கோப்பை தொடர் 2021 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் நடத்த பாகிஸ்தான் நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி வருகிற ஜூன் மாதம் ஆசிய கோப்பை நடத்துவதற்கு தயாராக இருந்த நிலையில் மீண்டும் தற்பொழுது கொரோனா காரணமாகவும், பங்கேற்ற விளையாடும் அணிகளின் நேரமின்மை காரணமாகவும் மீண்டும் ஒருமுறை ஆசிய கோப்பை தொடர் 2022ஆம் ஆண்டுக்கு தள்ளப்பட்டுள்ளது.
விளையாடும் அணிகளின் நேரமின்மை காரணமாகவும் ஒத்திவைப்பு
கொரோனோ காரணமாக ஒரு பக்கம் ஆசிய கோப்பை தள்ளிப் போனாலும் மறுபக்கம் இந்த வருடம் ஆசிய கோப்பையை நடத்துவதில் பெரிய சிக்கல் எழுந்துள்ளது. ஒவ்வொரு அணிகளும் தற்பொழுது கால அட்டவணைப்படி பல தொடர்களில் விளையாட உள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் பாதியில் நின்ற தங்களுடைய பிரீமியர் லீக் தொடர்களை மீண்டும் நடத்த வேண்டும். ஒரு பக்கம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பிரீமியர் லீக் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இவர்கள் சில வெளிநாட்டு தொடர்களையும் விளையாட இருப்பதாலும்,இனி ஒரு ஆண்டுகாலம் கால அட்டவணை சரியாக இருப்பதன் காரணமாகவும் ஆசிய கோப்பையை அடுத்த ஆண்டு நடத்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடர்
இது சம்பந்தமாக செய்தி கடந்த 23ஆம் தேதி வெளிவந்தது. கடைசியாக 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தப்பட்டது. அந்த ஐம்பது ஓவர் கொண்ட ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப திட்டப்படி 20 ஓவர் கொண்ட ஆசிய கோப்பை தொடரை முதலில் பாகிஸ்தான் நடத்துவதும், அதன் பின்னர் ஐம்பது ஓவர் கொண்ட ஆசிய கோப்பை தொடரை ஸ்ரீலங்கா நடத்துவதாக இருந்தது. இடையில் இந்த இரு கிரிக்கெட் நிர்வாகமும் தங்களது தொடரை பரிமாறிக் கொண்டது. இதன் மூலம் 50 ஓவர் கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானிலும் 20 ஓவர் கொண்ட ஆசிய கோப்பை தொடர் இலங்கையிலும் வைத்து நடத்த திட்டமிட்டனர்.
எனவே இனி அடுத்து நடக்க இருக்கும் 20 ஓவர் கொண்ட ஆசிய கோப்பை தொடர் அடுத்த வருடம் 2022இல் இலங்கையில் வைத்து நடக்க இருக்கிறது. அதற்கு அடுத்த 50 ஓவர் கொண்ட ஆசிய கோப்பை தொடர் 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது