வேற வழி இல்ல.. நீங்க தான் காப்பாத்தனும்; ஆசிய கோப்பையில் பும்ராஹ்வின் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய பும்ராஹ்விற்கு பதிலாக, அவரது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி துவங்குகிறது. இதில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அடுத்தடுத்து பல வெற்றிகளை குவித்து வந்தாலும், ஆசிய கிரிக்கெட் தொடர் சவாலானது என்பதாலும், ஹர்சல் பட்டேல், பும்ராஹ் போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆசிய கிரிக்கெட் தொடர் சவாலானதாக இருக்கும் என தெரிகிறது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது, இந்திய அணியில் விராட் கோலி, கே.எல் ராகுல், அஸ்வின் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

என்னதான் அர்ஸ்தீப் சிங் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், வேகப்பந்து வீச்சிற்கு கூடுதல் சாதகமான துபாய் ஆடுகளங்களில் பும்ராஹ் போன்ற சீனியர் வேகப்பந்து வீச்சாளர் இல்லாமால் இந்திய அணி என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், பும்ராஹ்விற்கு பதிலாக இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

3- ரவி பிஸ்னோய்

சமீபத்தில் நடைபெற்ற டி.20 போட்டிகளில் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கொண்ட ரவி பிஸ்னோய், விண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுவரை மொத்தம் 15 சர்வதேச டி.20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரவி பிஸ்னோய் அதில் 15 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். துபாயின் சில ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாகனது என்பதால் ரவி பிஸ்னோயின் பங்கு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என தெரிகிறது.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.