ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், விராட் கோலி, கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா போன்ற வீரர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் இவர்களின் பங்கே முக்கியமானதாக இருக்கும் என கருதப்படுகிறது. அதே வேளையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் இந்திய அணிக்கே பின்னடைவை ஏற்படுத்துவும் வாய்ப்புகள் உள்ளது. அப்படிப்பட்ட மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஆவேஸ் கான்;
ஹர்சல் பட்டேல், பும்ராஹ் ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்களை எடுக்காத இந்திய அணி, ஆவேஸ் கானிற்கு இடம் கிடைத்துள்ளது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் இருந்தே பந்துவீச்சில் சுமாராக செயல்பட்டு வரும் ஆவேஸ் கான், இந்திய அணிக்காக கொடுக்கப்பட்ட பல வாய்ப்புகளை வீணடிக்கவே செய்தார். பல போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய ஆவேஸ் கான், ஓரிரு போட்டிகளில் மட்டுமே ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டார். ஆசிய கோப்பை தொடரிலும் ஆவேஸ் கான் பந்துவீச்சில் சொதப்பும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.