ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சரியான காரணங்கள் இன்றி சேர்க்கப்பட்டுள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான்.
ஸ்டாண்ட்பை வீரர்கள்;
ஸ்ரேயஸ் ஐயர், அக்ஷர் பட்டேல், தீபக் சாஹர்.
ஹர்சல் பட்டேல்,பும்ராஹ் ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினர். இந்த தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங் போன்ற சிறப்பான வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும், சரியான காரணமே இல்லாமல் இடம்பிடித்துள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
3- ஆவேஸ் கான்;
சமீபத்தில் நடைபெற்ற அதிகமான டி.20 போட்டிகளில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை ஆவேஸ் கான், ஓரிரு போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தி கொண்டார். ஓரிரு போட்டிகளை தவிர மற்ற போட்டிகளை ரன்களை வாரி வழங்கிய ஆவேஸ் கானும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது சரியான முடிவா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், பும்ராஹ், ஹர்சல் பட்டேல் போன்ற நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி அல்லது முகமது சிராஜ் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. முகமது ஷமியை விட ஆவேஸ் கானிற்கு இந்திய அணி முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்பது புரியாத புதிரே.