முக்கிய வீரர் அதிரடி நீக்கம்… ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு !!

எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இலங்கையில் தற்போது நிலவி வரும் அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு எமிரகத்திற்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிபெறும் மற்றொரு அணி ஆகிய 3 அணிகளும் உள்ளன. பி பிரிவில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை நேற்று (2-8-22) வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆசிய கோப்பை தொடருக்குக்கான அணியுடன் சேர்த்து, நெதர்லாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ஹசன் அலி, ஆசிய கோப்பை மற்றும் நெதர்லாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் என இரு தொடருக்கான அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான், முகமது ரிஸ்வான், ஷாகின் ஷா அப்ரிடி, சல்மான் அலி, இமாம் உல் ஹக் போன்ற பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணியில், ஆசிப் அலி, முகமது நவாஸ், உஸ்மான் காதிர், ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நெதர்லாந்து தொடருக்கான் பாகிஸ்தான் அணி;

பாபர் அசாம் (கேப்டன்), ஷாதப் கான் (துணை கேப்டன்), அப்துல்லாஹ் ஷஃபிக், ஃப்கர் ஜமான், ஹரீஸ் ரவூஃப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, சல்மான் அலி, ஷாகின் ஷா அப்ரிடி, ஷாநவாஸ் தானி, ஜாஹிர் மெஹ்மூத்.

ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி;

பாபர் அசாம், ஷாதப் கான், ஆசிப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூஃப், இஃப்திகார் அகமத், குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷாகின் ஷா அப்ரிடி, ஷாநவாஸ், உஸ்மான் காதிர்.

Mohamed:

This website uses cookies.