இந்த வருடம் நடக்கவிருந்த பெரிய தொடர் ரத்து: சவுரவ் கங்குலி அறிவிப்பு! ரசிகர்கள் கவலை

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்று இருந்தாலும், அந்த உரிமையை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு விட்டுக்கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக அடுத்த ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் நேரலையில் நேற்று பேசுகையில், ‘செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது’ என்று தெரிவித்தார். கொரோனா பரவலால் ஆசிய கோப்பை போட்டியை ரத்து செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணியும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுவது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆசிய கோப்பை போட்டி ரத்தாகி இருப்பதன் மூலம் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அரங்கேறுவதில் இருந்த தடை நீங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

நாம் டோனியை இப்படி கொண்டாடுகிறோம் என்றால், அதற்கு முக்கிய காரணம் கங்குலி தான், ஏனெனில் முதல் போட்டியில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டோனி நடையை கட்டினார்.

இதனால் அடுத்து இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற போது, பாகிஸ்தான் தொடரில் மூன்றாவது வீரராக களமிறக்கி வாய்ப்பு கொடுத்தார் கங்குலி, அந்த போட்டியில் டோனி 148 ஓட்டங்கள் குவித்தார்.

அதன் பின் டோனி தொட்டது எல்லாம் வெற்றி என்பது போல் தான் அமைந்தது.

இந்நிலையில், டோனியை அறிமுகம் செய்தது குறித்து பிசிசிஐ நேரலையில் மயங்க் அகர்வால் கங்குலியிடம் கேட்ட போது, சிறந்த வீரர்களை தெரிவு செய்வது என்பது எனது கடமை.

ஒரு தலைவனாக நான் அனைத்து விதத்திலும் யோசித்து செயல்பட வேண்டும். சில நேரங்களில் உள்ளுணர்வு தோன்றும்.

அந்த உள்ளுணர்வை கேட்டால் நிச்சயம் நல்ல பலனே கிடைக்கும். அதன்படி டோனி விஷயத்திலும் எனக்கு அவ்வாறு தான் தோன்றியது தோனி ஒரு மிகச்சிறந்த வீரராக இந்திய அணிக்கு இருப்பார் என்று நான் உறுதியாக நம்பினேன்.

அவருக்கு நான் வாய்ப்பளித்தது மிகவும் பெருமை அடைகிறேன். இந்த அளவிற்கு டோனி இன்று உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் நல்ல பினிசர் மட்டுமல்ல ஒரு சிறந்த வீரரும் கூட ஏனெனில் நான் தலைவராக இருந்தபோது அவரை மூன்றாவது இடத்தில் இறக்கி விட்டு பல போட்டிகளில் சிறப்பாக விளையாட வைத்திருக்கிறேன் என்று புகழாரம் சூட்டினார்.

Mohamed:

This website uses cookies.