ஆசிய கோப்பை கிரிக்கெடில் ‘புக்கிகள்’: ஆப்கன் கிரிக்கெட் வீரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை!!

எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் கிரிக்கெட்டில் பிட்டிங் செய்வது ஓயாது என தெரிகிறது அடுத்தடுத்து பிட்டிங் செய்வது குறித்து பல விழிப்புணர்வு பிரசாரங்களும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மீண்டும் செய்ய பல வீரர்களை அனுகிக் கொண்டு இருக்கின்றனர் அந்த முக்கிய புள்ளிகள் முக்கிய புள்ளிகள். பல ஆண்டுகாலமாக இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொருத்தரையும் சரியாக கண்காணித்து வரும் அவர்கள் திறமையான மற்றும் ஏழமையாக இருக்கும் ஒரு வீரரை பிடித்துக் கொண்டு அவரிடம் பிக்சிங்செய்ய வைப்பது அவர்களது வேலையாகும்.

தற்போது அதே போல் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரை இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிக்சிங் செய்ய அணுகி இருக்கிறார். அவரை உடனே சுதாரித்த அந்த ஆப்கானிஸ்தான் வீரர் உடனடியாக ஆப்கானிஸ்தானின் மேலாளரை அணுகி இது தொடர்பாக தெரிவித்த பின்னர் அவர் இந்தியாவின் மேலாளரிடம் கூறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புப் பிரிவில் முறையிட்டனர். தற்போது இது தொடர்பாக கிரிக்கெட் கவுன்சிலின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த உள்ளது.

அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாசும், நஜ்மல் உசைன் ஷண்டோவும் களமிறங்கினர்.

இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்தது. மகமதுல்லா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இம்ருல் கெய்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்களை எடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் சார்பில் அல்தாப் ஆலம் 3 விக்கெட்டும், முஜிபுர் நயீப், குல்புதின் நயீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 250 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியில் முகமது மற்றும் இன்சானுல்லா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரகளாக களமிறங்கினர். இன்சானுல்லா 8 ரன்கள் மற்றும் ரக்மத் ஷா ஒரு ரன் என அடுத்தடுத்து தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முஸ்தாபிசுர் ரகுமான் பந்து வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த ரஷித் கான் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில் பைஸ் முறையில் சென்வாரி ஒரு ரன் எடுத்தார், நான்காவது பந்தில் ரன் அடிக்காமல் குல்புதின் நயீப் வீணடித்தார்.

பின்னர் 5-வது பந்தை மீண்டும் அடிக்காமல் விட்ட நயீப், பைஸ் முறையில் ஓரு ரன் ஓடினார். கடைசி பந்தில் வெற்றி பெற பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் விளையாடிய சென்வாரி, முஸ்தாபிசுர் ரகுமான் வீசிய நேர்த்தியாக அந்த பந்தை வீணடித்தார். இதனால் வங்காளதேசம் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Rajeshwaran Naveen: Cricket Fan - Dhoni Lover - CSK Forever

This website uses cookies.