எங்கள ரொம்ப குறைச்சு எடை போட்டுட்டீங்க… நியூசிலாந்து அணியை துவம்சம் செய்து மிகப்பெரும் வரலாறும் படைத்த ஆஸ்திரேலிய அணி !!

எங்கள ரொம்ப குறைச்சு எடை போட்டுட்டீங்க… நியூசிலாந்து அணியை துவம்சம் செய்து மிகப்பெரும் வரலாறும் படைத்த ஆஸ்திரேலிய அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்  388 ரன்கள் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி புதிய வரலாறு ஒன்றையும் படைத்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 27வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.

தர்மசாலா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டர்வீஸ் ஹெட் – டேவிட் வார்னர் ஆகியோர் மிக மிக சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 65 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். டர்வீஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் (41), இங்லீஸ் (38), கம்மின்ஸ் (37) உள்ளிட்ட வீரர்களும் தங்களது பங்களிப்பை ஓரளவிற்கு சரியாக செய்து கொடுத்ததன் மூலம் 49.2 ஓவரில் 388 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் பவுல்ட் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்தநிலையில், தொடர்ச்சியாக பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் 388 ரன்கள் குவித்ததன் மூலம் புதிய வரலாறு ஒன்றையும் படைத்துள்ளது.

தனது கடந்த இரண்டு போட்டிகளை போன்று நியூசிலாந்து அணியுடனான இந்த போட்டியிலும் 350+ ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 350+ ரன்கள் குவித்த ஒரே அணி என்ற சாதனை பெற்றுள்ளது.

 

Mohamed:

This website uses cookies.