உலகின் முதல் ரசிகர்கள் இல்லா கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் துவக்கம்!

“நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்; நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்!” – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ரசிகர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. உலக புகழ்ப்பெற்ற சிட்னி மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் இந்தப் போட்டி நடைபெறுவதால் கேலரிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

SYDNEY, AUSTRALIA – MARCH 13: Captains Aaron Finch of Australia and Kane Williamson of New Zealand touch elbows after the coin toss during game one of the One Day International series between Australia and New Zealand at Sydney Cricket Ground on March 13, 2020 in Sydney, Australia. (Photo by Matt King/Getty Images)

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அண்மையில் தென் ஆப்பிரிக்காவுடனான தொடரை இழந்த ஆஸ்திரேலியா, இப்போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் அதிரடியாக விளையாடி வருகிறது

ரசிகர்கள் இல்லாததால் சிக்ஸர்களாக கேலரிக்கு விரட்டப்படும் பந்துகளை, நியூசிலாந்து வீரர்களே சென்று எடுத்து வருகின்றனர். இதில் ஆரோன் ஃபின்ச் அடித்த சிக்ஸர் ஒன்று கேலரிக்குள் வீழ்ந்தது. அந்த பந்தை நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட்சன் பல நாற்காலிகளை தாண்டிச் சென்று எடுத்து வந்தார். இந்த வீடியோவை பகிர்ந்த பலர் “ரசிகர்கள் இல்லாத நாள் கஷ்டம்தான்” என்றும், “ஆளே இல்லாத கடையில யாருக்குபா டீ ஆத்துறீங்க” என கிண்டலடித்து வருகின்றனர்.

New Zealand’s wicketkeeper Tom Latham (R) takes a successful catch to dismiss Australia’s batsman Aaron Finch(L) during the first one-day international (ODI) cricket match between Australian and New Zealand in Sydney on March 13, 2020. (Photo by Saeed KHAN / AFP) / — IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE —

இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-ஆவது ஒரு நாள் போட்டியும், அதைத்தொடர்ந்து 18-ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது ஒரு நாள் போட்டியும் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

 

 

Sathish Kumar:

This website uses cookies.