டேவிட் வார்னருக்கு இடம் கிடைக்குமா…? இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இது தான் !!

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோத உள்ளன.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் க்ரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்று இன்று துவங்குகிறது.

இன்றைய நாளுக்கான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோத உள்ளன.

இரு அணிகளுமே இந்த தொடரை வெற்றியுடன் துவங்குவதற்கு போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் துவக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஆரோன் பின்சுமே களமிறங்குவார்கள். டேவிட் வார்னர் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் இன்றைய போட்டியில் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படாது என்றே தெரிகிறது.

அதே போல் மிடில் ஆர்டரில் மிட்செல் மார்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கே இடம் கிடைக்கும். ஆல் ரவுண்டர்களாக ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகியோருக்கும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் அஷ்டன் ஆகர், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோருக்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா அணியுடனான போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மிட்செல் மார்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டோய்னிஸ், கிளன் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஆஷ்டன் ஆகர், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

Mohamed:

This website uses cookies.