ஜாம்பவான் டாம் பிராட்மேனின் சாதனை காலி…கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித் !!

ஜாம்பவான் டாம் பிராட்மேனின் சாதனை காலி…கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 30-ஆவது சதத்தை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் டொனால்ட் பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாபிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் 2-0 என கைப்பற்றிய தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியை சிட்னி மைதானத்தில் விளையாடி வருகிறது.

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் அடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவஜா 195* ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்கள், மார்னஸ் லபுசென் 79ரங்களும் மற்றும் டிராவிஸ் ஹெட் 70 ரங்களும் அடித்துள்ளனர்.

ஒரே சதம் 3 சாதனை..

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் தொடரில் தன்னுடைய 30வது சதத்தை அடித்துள்ளார்.மேலும் இந்த 30-வது சதத்தின் மூலம் ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த  வீரர் என்ற வரிசையில்,ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் டொனால்ட் பிரட்மேனின்(29சதம்) சாதனையை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.முதல் இரண்டு இடங்களில் ரிக்கி பாண்டிங் (41 சதம்) ஸ்டீவ் வாக்கும் ( 32 சதம்) இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்..

மேலும் இதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற வரிசையில்  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்மைக்கேல் கிளார்கை(8,643) பின்னுக்கு தள்ளி ஸ்டீவ் ஸ்மித்(8,647) 4வது இடத்தை பிடித்துள்ளார்.முதல் 3 இடங்களில் ரிக்கி பாண்டிங் (13,378)ஆலன் பார்டர் (11,174) மற்றும் ஸ்டீவ் வாக் (10,927 ) உள்ளனர்.

ஆக்டிவ் வீரர்களில் அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்..

மேலும் சமகால கிரிக்கெட்டின் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற வரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட்(28 சதம்) மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி(27 சதம்)  முறையே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.