முடிவுக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் 27 வருட தவம்… பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது வெஸ்ட் இண்டீஸ் !!

முடிவுக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் 27 வருட தவம்… பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது வெஸ்ட் இண்டீஸ்

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி மிகப்பெரும் வரலாறு படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கவாஜா 75 ரன்களும், அலெக்ஸ் கேரி 65 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய விண்டீஸ் அணி 193 ரன்கள் எடுத்துவிட்டு ஆல் அவுட்டானது.

இதன்பின் எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் 91 ரன்களும், கேமிரான் க்ரீன் 42 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்காததால் போட்டி பரபரப்பான கட்டத்திற்கு சென்றது. கைவசம் 1 விக்கெட்டை மட்டுமே வைத்திருந்து 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்த நிலையில், விண்டீஸ் அணியின் சமர் ஜோசப்  வீசிய பந்தில் அலெக்ஸ் கேரி ஸ்டெம்பை பறிகொடுத்து விக்கெட்டை இழந்ததார். இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற விண்டீஸ் அணி, கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. அதே போன்று கடந்த 1998ம் ஆண்டிற்கு பிறகு விண்டீஸ் அணி, பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளதும் இதுவே முதல் முறையாகும்.

 

Mohamed:

This website uses cookies.