ஸ்டீவ் ஸ்மித்திற்கு மீண்டும் கேப்டன் பதவி… வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடரில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 2ம் தேதி துவங்கும் ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாட் கம்மின்ஸ், ஜாஸ் ஹசில்வுட் போன்ற ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் பலருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இளம் வீரர்கள் பலருக்கு விண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது.
சியன் அபாட், கேமிரான் க்ரீன், ஹார்டி, டர்வீஸ் ஹெட், இங்லீஸ், ஆடம் ஜாம்பா போன்ற வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி;
ஸ்டீவ் ஸ்மித், சியன் அபாட், கேமிரான் க்ரீன், ஆரோன் ஹார்டி, டர்வீஸ் ஹெட், ஜாஸ் இங்லீஸ், மார்னஸ் லபுசேன், நாதன் எல்லீஸ், கிளன் மேக்ஸ்வெல், லான்ஸ் மோரிஸ், ஜெய் ரிச்சர்ட்சன், மாட் ஷார்ட், ஆடம் ஜாம்பா.