எங்களுக்கும் சம்பவம் செய்ய தெரியும்… வெறும் 65 ரன்ல இந்தியாவ ஆல் அவுட் ஆக்குறோம்; ஆஸ்திரேலிய வீரர் அதிரடி பேச்சு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் மிட்செல் மார்ஸ் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்று முடிவில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி 19ம் தேதி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சமகால கிரிக்கெட்டின் வலுவான இரு அணிகள் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மோத உள்ளதால், இறுதி போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி குறித்தே பேசி வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மிட்செல் மார்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியே வெல்லும் என பேசியிருந்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய மிட்செல் மார்ஸ், ஐபிஎல் தொடரின் போது எடுக்கப்பட்ட ஒரு பாட்காஸ்டில் உலகக்கோப்பை தொடர் குறித்தான தனது கணிப்பை வெளிப்படுத்தியிருந்தார். உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியுமே தகுதி பெறும் என கணித்திருந்த மிட்செல் மார்ஸ், இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெறும் 2 விக்கெட்டிற்கு 450 ரன்கள் குவிக்கும் என்றும் இந்திய அணி வெறும் 65 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 385 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணியே சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று பேசியிருந்தார்.
மிட்செல் மார்ஸ் கணித்திருந்தது போலவே தற்போது இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், மிட்செல் மார்ஸ் கடந்த மே மாதம் பேசியிருந்தது தற்போது வைரலாக பரவியும் வருகிறது.