நாங்க 450 அடிப்போம்… இந்திய அணி 65 ரன்னை கூட தாண்டாது… சிரிக்காமல் சீன் போட்ட ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ் !!

நாங்க 450 அடிப்போம்… இந்திய அணி 65 ரன்னை கூட தாண்டாது… சிரிக்காமல் சீன் போட்ட ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ்

2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் 65 ரன்கள் இந்திய அணி ஆல் அவுட் ஆகும் என ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிச்சல் மார்ஸ் தெரிவித்துள்ளார்.

2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி ஆரம்பித்து நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை ஒவ்வொரு அணிகளும் செய்து வருகிறது.

குறிப்பாக இந்த உலகக் கோப்பை தொடர் இந்திய மைதானத்தில் நடைபெறும் என்பதால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார் போல் ஒவ்வொரு அணியும் தங்களை தயார் செய்து வருகிறது.

ஒவ்வொரு உலகக் கோப்பை தொடருக்கு முன்பும் பேசுவது போல இந்த உலகக் கோப்பை தொடரிலும் மிகவும் அச்சுறுத்தலான அணியாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் திகழும் என பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பேசி வரும் இந்த நிலையில்,ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிச்சல் மார்ஸ்.,இந்திய அணி இறுதிப்போட்டியில் 65 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவும் என வெளிப்படையாகவே தன்னுடைய கணிப்பை தெரியப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து மிச்சல் மார்ஸ் தெரிவித்ததாவது., 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணி விளையாடும், இதில் நிச்சயம் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வெற்றி பெறும் இதில் ஆஸ்திரேலியா 450/2 ரன்களும் இந்திய அணி 65 ரன்களில் ஆல் அவுட் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

2023 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிச்சல் மார்ஸ்., தனது அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணி,பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக முயற்சி செய்யாமல், இப்படி முட்டாள்தனமாக பேசி வருவதாக ஒரு சில கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Mohamed Ashique:

This website uses cookies.