அடிபட்டும் திருந்தாத ஸ்மித்: பால் டேம்பரிங் செய்த வீரருக்கு ஆதரவு கொடுத்து சர்ச்சை!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் பந்தை சேதப்படுத்தி தடைக்குள்ளான நிக்கோலஸ் பூரனுக்கு ஸ்மித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த வீரரான ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார். ஓராண்டு தடைக்குப்பின் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார். முதல் தொடரான ஆஷஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதனால் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

“I know Nicholas, I’ve played a bit of cricket with him and he’s a talented player and someone with a bright future,” Smith said of wicketkeeper-batsman Pooran, who has played 16 one-day internationals and 14 Twenty20 internationals.

இந்நிலையில் இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வலுவான வீரராக வருவார் என ஸ்மித் நிக்கோலஸ் பூரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

நிக்கோலஸ் பூரன் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் மாறுபட்டவர்கள். அதேபோல் ஒவ்வொரு கிரிக்கெட் போர்டும் மாறுபட்டது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை அவரவர் வழிகளில் கையாள்வார்கள். என்னைப் பொறுத்த வரைக்கும், முகத்தில் அறையப்பட்டு அதை எதிர்கொண்டேன்.

எனக்கு நிக்கோலஸ் பற்றி தெரியும். அவருடன் சிறிய காலம் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அவர் திறமையான வீரர். அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அவர் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அதில் இருந்து கடந்து செல்வார் என நினைக்கிறேன்.

Pooran was given a four-game ban during the third one-day international against Afghanistan, the International Cricket Council (ICC) said last week.

நான் இந்த விஷயத்தை கடினமாக உணர்ந்ததில்லை. நான் கடந்த காலத்தில் இருந்து விலகி வந்துவிட்டேன். தற்போது வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் மீது கவனம் செலுத்துகிறேன்.

கரிபீயன் பிரிமீயர் லீக்கில் பூரனுடன் விளையாடியுள்ளேன். ஒயிட் பால் கிரிக்கெட்டில் அவர் ஒரு தலைசிறந்த வீரராக இருக்கப்போகிறார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.