டெஸ்ட் தரவரிசை வெளியீடு! 4 ஆண்டுகளாக இருந்த இந்தியாவின் முதலிடத்திற்கு ஆப்படித்த ஆஸி., அணி?

டெஸ்ட் தரவரிசை வெளியீடு! 4 ஆண்டுகளாக இருந்த இந்தியாவின் முதலிடத்திற்கு ஆப்படித்த ஆஸி., அணி?

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி தரப்பு இன்று வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நிர்வாகம் ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட்டிருக்கிறது. இதில் அதிர்ச்சி தரும் விதமாக கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதலிடத்தில் நீடித்து வந்த இந்திய அணி 2 இடங்கள் கீழே இறங்கி 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறது.

கடும் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்ததாக, இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து 115 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. 105 மற்றும் 91 ஆகியவற்றில் முறையே இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன.

27 மாதங்களாக டி20 தரவரிசையில் முதலிடத்தில் நீடித்து வந்த பாகிஸ்தான் அணி இம்முறை தரவரிசை பட்டியலில் கீழே தள்ளப்பட்டு இருக்கிறது. 278 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி டி20 தரவரிசை பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளது. 268 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்திலும் 266 புள்ளிகளுடன் இந்திய அணி மூன்றாம் இடத்திற்கும் முன்னேறி இருக்கின்றன.

SYDNEY, AUSTRALIA – JANUARY 07: Virat Kohli of India kisses the Border–Gavaskar Trophy after India’s 2-1 series win after day five of the Fourth Test match in the series between Australia and India at Sydney Cricket Ground on January 07, 2019 in Sydney, Australia. (Photo by Mark Kolbe/Getty Images)

ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி தொடர்ந்து 119 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கின்றது. இங்கிலாந்து 127 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

டெஸ்ட் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியல்: 

1 – ஆஸ்திரேலியா (116 புள்ளிகள்)

2 – நியூசிலாந்து (115)

3 – இந்தியா (114)

4 – இங்கிலாந்து (105)

5 – இலங்கை (91)

6 – தென்னாப்பிரிக்கா (90)

7 – பாகிஸ்தான் (86)

8 – மேற்கிந்திய தீவுகள் (79)

9 – பங்களாதேஷ் (55)

10 – ஜிம்பாப்வே (18)

 

 

 

Prabhu Soundar:

This website uses cookies.