இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் கம்பீர் !!

இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் கம்பீர்

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சமாளிக்க தேவையான சில யுக்திகளை முன்னாள் வீரர்  கம்பீர், இந்திய அணியின் துவக்க வீரர்களுக்கு ஆலோசனைகளாக வழங்கியுள்ளார்.

இந்திய அணியில் இருந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த கம்பீர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

PRETORIA, SOUTH AFRICA – JANUARY 14: Murali Vijay of India during day 2 of the 2nd Sunfoil Test match between South Africa and India at SuperSport Park on January 14, 

இதனையடுத்து தனது கிரிக்கெட் பயணத்தில் தனது மோசமான அனுபவங்கள் குறித்தும், தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்தும், தனது அனுபவங்கள் குறித்தும் பலவற்ற கவுதம் கம்பீர் வெளிப்படையாக பேட்டியளித்து வருகிறார்.

அதே போல் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி  ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய அணியின் துவக்க வீரர்களுக்கு சில ஆலோசனைகளையும் கவுதம் கம்பீர் வழங்கியுள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது,

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் ஆக்ரோஷமானவர்கள். அவர்களிடம் பொறுமையை கையாளவுவது மிகவும் அவசியம். டெஸ்ட் போட்டிகளில் முதல் நாளின் முதல் பந்தை எதிர்கொள்வது என்பது மிக மிக கடினமான விசயம். 10,000, 150000 ரன்களை கடந்த ஜாம்பவான்களில் பெரும்பாலானோர் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரர்களாக இருந்திருக்க மாட்டார்கள். நம்மை நாமே தற்காத்து கொள்ள வேண்டும், வீரர்களை மாற்றி கொண்டே இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஒவ்வொரு வீரர்களுக்கும் தேவையான வாய்ப்பை வழங்க வேண்டியதும், அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டியதும் அணி நிர்வாகத்தின் கடமை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய கம்பீர், ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது நமக்கு சாதமான விசயம் தான். கடந்த இரண்டு மூன்று தொடர்களை விட இந்த தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர், இருந்த போதிலும் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட்டு விட கூடாது. எவ்விதமான அணியையும் திணறடிக்க கூடிய பந்துவீச்சாளர்களை கொண்டது ஆஸ்திரேலிய அணி, ஒவ்வொரு போட்டியிலும் கவனமாக விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.