இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது முதல் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடக்க இருக்கிறது இந்திய நேரப்படி காலை ஒன்பது பத்து மணிக்கு இந்த போட்டி துவங்கும்
முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் பிரிக்க தேர்வு செய்திருக்கிறார் அந்த அணியில் பெரிதான மாற்றங்கள் ஏதுமில்லை
இந்திய அணியை பொறுத்தவரை ரோஹித் சர்மா இல்லாத நேரத்தில் துவக்க வீரராக மயாங்க் அகர்வால் களமிறங்கப் போகிறார் மற்றொருபுறம் ஷிகர் தவான் இருக்க 3வது வீரராக கேப்டன் விராட் கோலியும் 4-வது வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் ஆகியோர் களம் இறங்குகின்றனர்
ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஜஸ்பிரித் பும்ரா மற்றும் நவதீப் சைனி ஆகியோரும் இடம் பிடித்திருக்கின்றனர் சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் இடம் பிடித்திருக்கிறார்
அணிகள்:
இந்தியா (விளையாடும் லெவன்): ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், விராட் கோலி (இ), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (வ), ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சைனி
ஆஸ்திரேலியா (விளையாடும் லெவன்): ஆரோன் பிஞ்ச் (சி), டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (டபிள்யூ), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்