நான் அப்படி சொல்லவே இல்லங்க; அந்தர் பல்டி அடித்த ஆஸ்திரேலியா வீரர் !!

நான் அப்படி சொல்லவே இல்லங்க; அந்தர் பல்டி அடித்த ஆஸ்திரேலியா வீரர்

ஆஸ்திரேலியா வரும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலியை ஒரு சதம் கூட அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம் என்று கூறிய ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் இப்போது அது பற்றி விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணி, இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி, அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ், ’ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் விளையாட வரும் இந்திய அணியை வீழ்த்துவோம். அந்த அணியின் கேப்டன் விராத் கோலியை ஒரு சதம் அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம்’ என்று தெரிவித்திருந்தார்’ .

 

ஆஸ்திரேலிய மண்ணில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராத் கோலி 62 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அங்கு 5 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது என்று கூறியிருக்கிறார் பேட் கம்மின்ஸ்.

“I think we’ll leave that be…I don’t think we’ll be calling out anyone this summer. We’ll just hopefully take plenty of wickets and the other team will hopefully not score many runs.”

 

‘இந்திய அணிக்கு கோலி முக்கியமான வீரர். அவர் அதிகமாக ரன்கள் குவித்தால் நாங்கள் வெற்றி பெற சிரமமாக இருக்கும். அதனால் அவரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. இதை நான் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாகவே சொன்னேன். அவர் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்றோ வேறு தவறான அர்த்தத்திலோ சொல்லவில்லை’ என்று தெரிவித்துள்ளார்

Mohamed:

This website uses cookies.