வருகிற ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியா பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. முன்னர் திட்டமிட்டு இருந்தபடி மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவதாக இருந்த ஆஸ்திரேலியா தற்பொழுது மேலும் இரண்டு போட்டிகள் சேர்த்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
இதை தற்பொழுது பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் அக்ரம்கான் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிற பங்களாதேஷ் வீரர்கள்
இது குறித்து பேசியுள்ள அக்ரம் கான், வருகிற ஜூன் மாதம் பங்களாதேஷ் வீரர்கள் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். முன்னே திட்டமிட்டிருந்த படி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் தற்பொழுது அதில் ஒரு போட்டியை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக டி20 போட்டியை இணைத்துள்ளோம்.
அதன்படி தற்பொழுது ஜூன் மாதம் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.
ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷிற்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்திரேலியா தங்கள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறியுள்ளார். மூன்று போட்டிகளில் விளையாட இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு போட்டிகள் சேர்த்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க இருப்பதாக உறுதி அளித்துள்ளார். இது இவ்விரு அணைக்கும் உலக கோப்பை டி20 தொடர் விளையாடுவதற்கு ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி பார்க்கையில் ஆஸ்திரேலியா ஜூலை மாதத்தில் மேற்கிந்திய தீவுக்கு சென்று 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டியில் விளையாடி விட்டு அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷிற்கு சென்று டி 20 தொடரை விளையாட இருக்கிறது.
ஆஸ்திரேலிய உடனான போட்டி தொடர் முடிந்தவுடன், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதும் குறிப்பிடத்தக்கது.